புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் பதவியை திரு . சிவக்கொழுந்து ராஜினாமா செய்துள்ளார் .
முதலமைச்சர் திரு. நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி அரசு அண்மையில் சட்டப்பேரவையில் நடந்த வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. அங்கு காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு அரசியல் பரபரப்பு சற்று ஓய்ந்து இருந்த நிலையில், தற்போது புதுச்சேரி வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான திரு . அமித்ஷா முன்னிலையில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் திரு . சிவக்கொழுந்துவின் சகோதரர் திரு. ராமலிங்கம் அக்கட்சியில் இணைந்தார். இதன் தொடர்ச்சியாக சிவக்கொழுந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்த ராஜினாமா கடிதத்தை பொறுப்பு துணை நிலை ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்திரராஜனிடம் அனுப்பினார்.