டிராக்டரில் இருந்து கீழே விழுந்த விவசாயி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியில் வெங்கடாசலம் என்ற விவசாயி வசித்து வருகிறார். இந்நிலையில் தனது வயலில் டிராக்டர் மூலம் உழவுப் பணியை செய்து கொண்டிருந்த போது, டிராக்டர் கவிழ்ந்து வெங்கடாசலம் நிலைதடுமாறி வரப்பின் பகுதியில் விழுந்து விட்டார்.
இதனையடுத்து தவறி விழுந்த வெங்கடாச்சலம் எதிர்பாராதவிதமாக டிராக்டரின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அவ்விடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து ஊத்தங்கரை காவல்துறையினர் வழக்கு பதிந்து தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.