முன்விரோதம் காரணமாக இளம் பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தில்லைவிளாகம் கோவிலடி பகுதியில் சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். கீதாவிற்கும் அதே பகுதியில் வசித்து வரும் துரைராஜ் என்ற நபருக்கும் இடையே சில தினங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் துரைராஜ் கீதாவின் மீது வன்மத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று துரைராஜ் அந்த இளம்பெண்ணை மோசமாக தாக்கியுள்ளார். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து கீதா முத்துப்பேட்டை பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் துரைராஜ் மீது வழக்கு பதிந்து பின் கைது செய்தனர்.