நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சலார் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
பாகுபலி என்ற பிரமாண்ட படத்தின் மூலம் உலக அளவில் புகழ்பெற்ற நடிகர் பிரபாஸ் ராதே ஷ்யாம், ஆதி புருஷ் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார் . தற்போது நடிகர் பிரபாஸ் கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘சலார்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக சுருதிஹாசன் நடிக்கிறார் . மேலும் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல கன்னட நடிகர் மது குருசாமி நடிக்கிறார் .
https://twitter.com/prashanth_neel/status/1365963626977239044
தெலுங்கு , கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. இந்நிலையில் ‘சலார்’ திரைப்படம் அடுத்த ஆண்டு (2022) ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . இதனால் பிரபாஸ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.