கனடாவில் 28 வயது இளம்பெண் காணாமல் போன வழக்கில் அந்த பெண் பற்றிய தகவல்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
கனடாவில் 28 வயது நிரம்பிய தைஷா லேம்ப் என்ற இளம்பெண் வசித்து வந்தார். இவர் கடந்த 1 வாரத்திற்கு முன்பு காணாமல் போனதால் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் தைஷா காணாமல் போவதற்கு முன்பாக பிப்ரவரி 23ஆம் தேதி கடைசியாக குடும்பத்தினருக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பினார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது .
தைஷாவின் உயரம் 5 அடி 1 அங்குலம். அவர் சாதாரண உடல் வாகுடன் தான் இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் தைஷா காணாமல் போகும் போது எந்த நிற உடை அணிந்திருந்தார் என்பது தெரியவில்லை. கனடாவில் அவருக்கு நிரந்தரமான முகவரி எதுவும் இல்லை என்பதால் தைஷாவை யாராவது எந்த இடத்திலாவது பார்த்தால் தங்களிடம் வந்து தகவல் தெரிவிக்கலாம் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.மேலும் அவரது புகைப்படத்தையும் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.