Categories
உலக செய்திகள்

அம்மாடியோ… 2 நாய்களை கண்டுபிடித்தால் 3.6 கோடி பரிசா?… அப்படி என்ன நாய் அது?…!!!

அமெரிக்க பாடகி லேடி காகா வளர்க்கும் இரண்டு நாய்களை கண்டுபிடித்து தந்தால் 3.6 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகை மற்றும் பாடகியுமான லேடி காகா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வருகின்றார். அவர் பிரெஞ்ச் புல்டாக் இனத்தை சார்ந்த கோஜி மற்றும் குஸ்டவ் ஆகிய இரண்டு நாய்களை வளர்த்து வருகின்றார். அவரின் வீட்டு வேலைக்காரர் கடந்த புதன்கிழமை இரவு, நாய்களை நடை பயணத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர், வேலைக்காரரை துப்பாக்கியால் சுட்டு விட்டு இரண்டு நாய்களையும் வாகனத்தில் கடத்திச் சென்றார். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் படப்பிடிப்புக்காக இத்தாலி சென்றுள்ள லேடி காகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எனது இதயம் நொறுங்கி விட்டது. கருணை மனப்பான்மையால் என் குடும்பத்தினர் மீண்டும் ஒன்று சேர பிரார்த்தனை செய்கிறேன். அவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப உதவினால் 3.6 கோடி பரிசு வழங்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார். தற்போது அந்த இரண்டு நாய்களும் பத்திரமாக மீட்கப்பட்டு நடிகை லேடி காகா வீட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் எங்கிருந்து யார் மூலம் நீக்கப்பட்டது என்று போலீசார் கூறவில்லை.

Categories

Tech |