தமிழ் கற்க வேண்டும் என நீண்ட நாட்கள் முயற்சி செய்தும் என்னால் முடியவில்லை என பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.
உலகின் தொன்மையான மொழியான தமிழைக் கற்க முடியவில்லை என்று பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். தமிழ் இலக்கியம் மற்றும் கவிதைகளிலும் குறித்து என்னிடம் பலர் கூறியுள்ளனர். இந்த உலகத்தில் மிக ஆழமான மொழிகளில் தமிழும் ஒன்று. அதனை கற்க வேண்டுமென்ற நான் முயற்சி செய்தாலும் இந்த முயற்சியில் என்னால் வெற்றிபெற முடியவில்லை. நான் குஜராத் முதல்வர் ஆனதில் இருந்து பிரதமர் ஆன பின்பும் தமிழ் கற்க வருகிறேன்.
ஆனால் சரியாக பார்க்க முடியவில்லை. தமிழ் மிகவும் தொன்மையான மொழி. அந்த மொழியில் உள்ள இலக்கிய மிகவும் தொன்மை வாய்ந்தது. மாணவர்கள் தேர்வு குறித்து கவலைப்படாமல் சிரித்த முகத்துடன் அதனை எதிர்கொள்ள வேண்டும். நமது கனவுகளை நினைவாக்க மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. நாம் சுய சார்புடன் இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்