மக்களின் பொழுதுபோக்கை மேம்படுத்துவதற்காக அல்குரம் கடற்பகுதி உருவாக்கப்பட்டு தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
அபுதாபியில் அல்குரம் என்னும் கடற்கரை பகுதி பல பொழுதுபோக்கு சிறப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது தற்போது மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் மக்களின் பொழுதுபோக்கிற்காக பூங்காக்கள், பொழுதுபோக்கு நிலையங்கள், கடற்கரை பகுதிகள் என பல இடங்களிருந்தும். தற்போது ஷேக் ஜாயித் சாலை பகுதிக்கு அருகே புதிதாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அல்குரம் கடற்கரைப்பகுதி மேம்படுத்தப்பட்டு வந்தது. மாங்குரோவ் கடற்பகுதியை ஒட்டி இப்பகுதி உள்ளது.
இங்குள்ள சிறப்பம்சங்கள் பற்றி அபுதாபி மாநகராட்சி கூறுவது பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு நடைபாதை போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களது உடலை சிறப்பாக பாதுகாத்துக் கொள்ள முடியும் 3.5 கிலோமீட்டர் நீளத்திற்கு இந்த நடைபாதையானது போடப்பட்டுள்ளது. உடற்பயிற்சி மட்டுமல்லாது யோகா செய்வதற்கான வசதியும் இங்கு உள்ளது. இது மட்டுமல்லாது சைக்கிள் ஓட்டும் வசதியும் இங்கு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பகுதிக்கு வரும் குழந்தைகளின் அறிவுத் திறனை மேம்படுத்துவதற்காக நூலகம் ஒன்று உள்ளது.
அதில் அறிவை வளர்க்கும் நூல்களும் இடம்பெற்றுள்ளன. அத்தோடு தொலைநோக்கி ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் பொழுதுபோக்குக்காக டால்பின் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து இறைச்சியை சுட்டு சாப்பிடும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் குடும்பத்தினர் அனைவரும் மற்றும் நண்பர்களும் ஒரே இடத்தில் உட்கார்ந்து சாப்பிடுமாறு பெரிய இடமும் இங்கு உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது பொழுதை கழிக்க உதவும் இடமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது என கூறியுள்ளது.