இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் மார்ச் 23, 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், போட்டிக்கு ரசிகர்களை அனுமதித்தால் கொரோணா பரவும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
அதனால் ரசிகர்கள் இல்லாமல் நடத்துவதற்கு பிசிசிஐ சார்பாக ஆலோசனை செய்யப்பட்டது. இந்நிலையில் புனேவில் 3 ஒருநாள் போட்டிகளில் ரசிகர்கள் இல்லாமல் நடத்துவதற்கு மகாராஷ்டிர மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை வீரர்கள் மற்றும் பிற அதிகாரிகளும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.