Categories
தேசிய செய்திகள்

“ஒரு வருடமாக டெபிட் கார்டை பயன்படுத்திய சமையல்காரர்”… 2.7 லட்சத்தை இழந்த முதலாளி… எப்படி தெரியுமா..?

ஒரே வருடத்தில் ரூபாய் 2.7 லட்சத்தை முதலாளியின் ஏடிஎம் கார்டில் இருந்து சமையல்காரர் ஒருவர் எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாம் நமது டெபிட் காடுகளில் பின் நம்பரை மறந்து விடக்கூடாது என்பதற்காக பின்புறமுள்ள அட்டையில் எழுதி வைப்பது வழக்கம். அவ்வாறுதான் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் டெபிட் கார்டுக்கு பின்புறத்தில் பின் நம்பரை எழுதி வைத்துள்ளார். இதனை அந்த வீட்டில் வேலை செய்து வந்த லட்சுமி நாராயணன் என்ற சமையல்காரர் அதனை நோட்டமிட்டு உள்ளார். பின்பு தனது முதலாளிக்கு அவரின் சகோதரி அமெரிக்காவிலிருந்து பணம் அனுப்புவதையும், அந்த பின் நம்பரையும் கவனித்து வந்துள்ளார்.

இதையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து தனது முதலாளியின் டெபிட் கார்டை அவருக்கு தெரியாமல் எடுத்து சென்று அருகில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணத்தை எடுத்து பின்னர் மீண்டும் யாருக்கும் சந்தேகம் வராத வகையில் எடுத்த இடத்தில் வைத்துள்ளார். இப்படி பலமுறை பண மோசடி செய்து வந்துள்ளார். பின்னர் பணம் அனுப்பிய சகோதரி இந்தியாவிற்கு வந்தபோது பண பரிவர்த்தனையை சரிபார்க்கும் போது தான் இந்த உண்மை தெரியவந்தது.

இதையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது புகாரின் அடிப்படையில் அனைவரையும் விசாரிக்கும்போது இவர்தான் பணத்தை எடுத்து தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இனிமேல் யாரும் டெபிட் கார்டுக்கு பின்புறம் தனது பின் நம்பரை எழுதி வைக்க வேண்டாம்.

Categories

Tech |