Categories
உலக செய்திகள்

ரூம்லருந்து வெளிய வந்த போது மாட்டிடாங்க… கட்டுப்பாடுகளை மீறிய காதலர்கள்… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய குற்றத்திற்காக சிங்கப்பூரில் இந்திய பெண் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அகதா மகேஷ் என்ற பெண் வசித்து வருகிறார். இவரை இங்கிலாந்தில் வசிக்கும் நைகல் ஸ்கீயா என்பவர் காதலித்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டதால், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அகதாவை பார்ப்பதற்காக நைகல் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். ஆனால் அப்போது சிங்கப்பூரில் தீவிரமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்கபட்டதால், நைகல் அங்கு உள்ள ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டதோடு, அந்த அறையை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

ஆனால் அதனை பொருட்படுத்தாத நைகல் அகதா மகேசை செல்போனில் தொடர்பு கொண்டு ஹோட்டலில் வந்து தன்னைச் சந்திக்குமாறு கூறியுள்ளார். இதனால் அந்த ஹோட்டலுக்கு சென்று அகதா வாடகைக்கு அறை எடுத்து தங்கிய போது, முக கவசம் கூட அணியாமல் நைகல் அவரது அறையிலிருந்து வெளியேறி அகதாவின் அறைக்கு சென்று இரவு நேரம் தங்கி விட்டார். இதனை அடுத்து காலையில் அவர் மீண்டும் தனது அறைக்குத் திரும்பும் போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த சுகாதார ஊழியரிடம் வசமாக மாட்டி விட்டார்.

இதனால் நைகல் மற்றும் அகதா மீது கடுமையான கட்டுப்பாடுகளை மீறிய குற்றத்திற்காக போலீசார் வழக்கு பதிந்து விட்டனர். இந்த வழக்கானது தலைநகர் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நடந்துள்ளது. இதனையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குற்றம் சாட்டப்பட்ட நைகலுக்கு இரண்டு வாரங்களும், அகதா மகேஷுக்கு ஒரு வாரமும் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டனர். அதோடு நைகலுக்கு ஆயிரம் டாலர் அபராதமும் விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

Categories

Tech |