ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பெண்கள் அணியின் பயிற்சியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கின் முன்னாள் பயிற்சியாளராக இருந்தவர் ஜோன் கெடெர்ட். இவர் கடந்த 2012ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பெண்கள் அணியின் பயிற்சியாளராக இருந்தார். மேலும் பெண்கள் ஜிம்னாஸ்டிக் அணியின் தலைவராகவும் இருந்தார்.
இந்நிலையில் அவர் மீது 20 மனித கடத்தல், முதல்நிலை பாலியல் வன்கொடுமை, இரண்டாம் நிலை பாலியல் வன்கொடுமை, குற்றவியல் தொழில் மற்றும் ஒரு போலீஸ் அதிகாரியிடம் பொய் சொன்னது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. இதனால் பிரபல பயிற்சியாளரும், தலைவருமான ஜோன் கெடெர்ட் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.