Categories
சினிமா தமிழ் சினிமா

வெற்றிகரமாக முடிந்த “ஆப்ரேஷன்”… நல்ல உள்ளங்களுக்கு “நன்றி” சொன்ன சனம் ஷெட்டி…!

 பிரபல நடிகை சனம் ஷெட்டி உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் அங்காடித் தெரு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சிந்து. இவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னிடம் சிகிச்சைக்கு பணமின்றி போராடி வருவதாக இணையத்தில் வீடியோவை வெளியிட்டார்.

சிந்து

இதைதொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை சனம் ஷெட்டி சிந்துவின் புகைப்படத்தை தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டு இவருக்கு ஆரம்ப கட்ட சிகிச்சை தற்போது முடிந்துள்ளது என்றும், அடுத்த கட்ட சிகிச்சைக்கு பணமும் தேவைப்படுகிறது என்பதால் நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது சிந்துவிற்கு ஆபரேஷன் முடிந்து அவர் நலமுடன் இருப்பதால் உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் சனம் ஷெட்டி நன்றி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |