Categories
மாநில செய்திகள்

கமல்- சரத்குமார் திடீர் சந்திப்பு… பின்னணி என்ன…?

மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசனுடன் சரத்குமார் சந்தித்து பேசியுள்ளார்.

அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமலஹாசன் உடன் சந்தித்து பேசியுள்ளார். இதனால் கட்சியில் அவர் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .அதிமுக கூட்டணியிலிருந்து சமத்துவ மக்கள் கட்சியும், திமுக கூட்டணியிலிருந்து இந்திய ஜனநாயக கட்சியும் விலகி புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளது. இதனை சரத்குமார் மற்றும் ரவி பச்சமுத்து ஆகியோர் அறிவித்தனர்.

இந்நிலையில் இன்று மக்கள் நீதி மையம் கட்சி தலைவருடன் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் சந்தித்துள்ளார். ஏற்கனவே சசிகலா நடராஜனை சந்தித்து பேசி இருந்த நிலையில் தற்போது கமல்ஹாசனை சந்தித்து பேசியிருப்பது மக்கள் நீதி மைய கட்சியுடன் கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |