Categories
தேசிய செய்திகள்

சொகுசு காரை ஓட்டிய 18 வயது மாணவர்… நடந்த துயர சம்பவம்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

விபத்தை ஏற்படுத்தி ஒருவரின் இறப்பிற்கு காரணமான சொகுசு காரை ஓட்டிச் என்ற 18 வயது மாணவரை போலீசார் கைது செய்தனர்.

டெல்லியில் உள்ள வசந்த் விகார் என்ற இடத்தில் சொகுசு கார் ஒன்று அந்தோணி ஜோசப் என்பவர் ஓட்டி சென்ற ஸ்கூட்டி மீது பலமாக மோதியது. இதில் அந்தோணிராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த காரை ஓட்டி சென்ற 18 வயது மாணவனான ஆரியன் ஜெயின் என்பவரை கைது செய்து விட்டனர்.

இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த அந்தோணி ஜோசப் மற்றும் விபத்தை ஏற்படுத்திய ஆரியனும் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள். மேலும் போலீசார் ஆரியனிடம் நடத்திய விசாரணையில் அவரது தந்தை சுசில் ஜெயின் டெல்லியில் நகைக்கடை வைத்துள்ளார் என்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. மேலும் ஆரியன் ஜெயின் காரை ஓட்டிய போது போதையில் இல்லை என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |