தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடத்தப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணைய தலைவர் சுனில் அரோரா தெரிவித்தார். மேலும் தேர்தலை கண்காணிப்பதற்காக அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.பொதுவாக அரசின் சட்டப்படி தேர்தல் தேதி அறிவித்த பிறகு எந்த ஒரு அரசியல் கட்சிகளும் மக்களை கவரும் வண்ணம் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிட கூடாது. இதனாலேயே கடந்த சில தினங்களுக்கு முன்னதாகவே முதல்வர் எடப்பாடி அதிரடியாக மக்களை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார்.
9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ், பயிர் கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி என அனைத்து அறிவிப்புகளையும் அறிவித்து வந்தது. இந்நிலையில் தேர்தல் தேதி இன்று வெளியானதையடுத்து எதையும் செய்ய முடியாது என்பதால் கரூர் மாவட்டத்தில் அதிமுக அரசு தேர்தல் தேதி அறிவிப்பததாக தகவல் கிடைத்ததையடுத்து அம்மாவட்ட ஆட்சியர் கயல்விழி அவசர அவசரமாக கட்டிடங்கள் திறப்பு மற்றும் திட்டங்களை தொடங்கி வைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.