Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ராணுவ முகாமுக்கு வந்த தொழிலாளர்கள்…. விஷவாயு தாக்கி உயிரிழப்பு…. போலீசார் விசாரணை…!!

 கால்வாயை சுத்தம் செய்ய வந்த தொழிலாளர் இருவர்  உயிரிழந்தது பரபரப்பை எற்படுத்துயுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்திற்கு பின் ராணுவ முகாம் உள்ளது.அங்குள்ள கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யும் பணி இன்று காலை தொடங்கியது. அன்னை சத்யா தெருவைச் சேர்ந்த வெங்கடேஷ்,சந்தோஷ்,ராஜா,மணிவண்ணன்,பன்னீர்செல்வம் ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி 5 நபரும் மயங்கி விழுந்தனர். இதை அடுத்து கோட்டை தீயணைப்பு படையினர் விரைந்து வந்து 5 நபரையும் மீட்டு ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

ஆனால் போகும் வழியிலேயே ராஜா மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மயக்கமுற்ற மற்ற மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து கோட்டை போலீசார் விசாரித்ததில் எந்தவித பாதுகாப்பும் இன்றி 5 நபரும் கால்வாயை சுத்தம் செய்ய வரவலைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.  இதன் தொடர்பாக தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து வந்தவரிடமும் இராணுவ அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Categories

Tech |