நாமக்கல் பள்ளி ஆசிரியரை தகாத வார்த்தையில் திட்டி முதன்மை கல்வி அலுவலர் பேசிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது வருகை பதிவேட்டை பயோமெட்ரிக் மூலம் பதிவிட வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்திருந்தார். இதனால் காலை 10.30 மணிக்குள் அனைத்து ஆசிரியர்களும் தங்களது வருகை பதிவேட்டை பதிவு செய்ய வேண்டும். இந்நிலையில் நாமக்கல் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அவரது பதிவேட்டை பதிவிட முயன்றபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு சிறிது கால தாமதமாக பதிவு செய்துள்ளார்.
இதனைப் பார்த்து கோபமடைந்த முதன்மை கல்வி அலுவலர் வாட்ஸ்அப் குழுவில் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் இதற்கான பதிலை கேட்டு உள்ளார். இவர் அதற்கான காரணங்களையும் தெரிவித்தார். இதற்கு இசைவு தெரிவிக்கும் வகையில் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த சரவணன் என்ற ஆசிரியர் ஆம் கருத்து பதிவிட்டுள்ளார். இதனை கண்ட அய்யண்ணன் தலைமை ஆசிரியரான சரவணனை தொடர்புகொண்டு தகாத வார்த்தையில் திட்டி அவரை ஒருமையில் பேசி உள்ளார். அவர் பேசிய ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.