நாடு முழுவதும் பொது ஊரடங்கை மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப் பட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. இருந்தாலும் இன்னும் முழுமையான தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் பொது ஊரடங்கு மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ள பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். மக்களுக்கு விரைந்து தடுப்பூசி போட அனைத்து மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.