உங்கள் கண் பார்வை பிரச்சனை நீங்கி பூரண குணமடைய இதனை தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் போதும்.
தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது.
தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு இளம் வயதிலேயே கண் பார்வை குறைந்து விடுகிறது. அவ்வாறு கண்பார்வை பிரச்சனை உள்ளவர்கள் செலரிக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை- 500 கிராம் இரண்டையும் தேவையான அளவு எடுத்து ஆய்ந்து சுத்தப் படுத்திக் கொள்ளவும். பிறகு அதனை நன்கு உலர வைத்து இரண்டையும் தனித்தனியாக அரைத்து ஒன்றாகக் கலக்கி கொள்ளவும். இதனை தினமும் அதிகாலை மற்றும் மாலை இரண்டு வேளையும் தலா 2 கிராம் எடுத்து சாப்பாட்டிற்குப் பிறகு சுடு நீரில் கலந்து குடித்து வந்தால் கண்பார்வை குறைபாடுகள் அனைத்தும் நீங்கும்.