Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

தமிழகத்தில் தேர்தல் அறிவிப்பு… வாக்குப் பதிவு நேரம் அதிகரிப்பு… தேர்தல் ஆணையம் அறிவிப்பு …!!

இந்திய தலைமை ஆணையர் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாமில் உள்ளிட்ட மாநிலங்களுக்கான தேர்தல் அறிவிப்பை வெளியிடுகின்றார். இதில் பேசிய தலைமை தேர்தல் ஆணையர், இந்த 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமல். கொரோனா காலம் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் தேர்தல் நடத்துகிறோம்.

கொரோனாவுக்கு மத்தியில் நடந்த பீகார் தேர்தலில் 57% வாக்குகள் பதிவாகி இருந்தன. கொரோனா அச்சுறுத்தலை சுகாதாரத்துறை மூலம் சமாளித்து வருகிறோம். 5 மாநிலங்களிலும் வாக்குப் பதிவு நேரமும் அதிகரிப்புஅனைத்து வாக்கு சாவடிகளும் தரை தளத்தில் அமைக்கப்படும்.

வாக்காளர்களின் பாதுகாப்பு மிக மிக முக்கியமானது. கொரோனா சமயத்தில் பீகார் தேர்தலை நடத்தியது சவாலாக இருந்தது. பீகாரில் அதிக அளவாக 57% வாக்குகள் பதிவானது. தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது என தெரிவித்தார்.

Categories

Tech |