சசிகலா – சீமான் சந்தித்து பேசியது குறித்து தகவல் வெளியாகி அரசியல் களத்தில் விவாதத்தை உருவாகியுள்ளது.
சசிகலா சிறையில் இருந்து வந்து யாரையும் சந்திக்காத நிலையில் தியாகராய நகர் வீட்டில் இரு தினங்களுக்கு முன் சில பிரமுகர்கள் சசிகலாவை சந்தித்து பேசியுள்ளனர். அதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார். இவர்கள் பேசியது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சீமானும் கடந்த 2009ஆம் ஆண்டு சிறையில் இருந்திருக்கிறார் . அதே போன்று சசிகலாவும் கடந்த 4 ஆண்டுகளாக சிறையில் இருந்தார். எனவே இருவரும் அவர்களின் சிறை அனுபவத்தை பற்றி பேசியுள்ளனர்.
மேலும் சீமான் சசிகலாவிடம் இந்த 4 ஆண்டுகளில் பா.ஜ.கவால் பல சோதனைகளை அனுபவித்து விட்டீர்கள். எனவே பா.ஜ.கவை எதிர்ப்பது குறித்து உறுதியாக இருங்கள். அவர்கள் கண்டிப்பாக அ.தி.மு.க மற்றும் அ.மு.மு.க ஆகிய இரண்டு கட்சிகளையும் அழிக்க தான் செய்வார்கள் என்றும் , பா.ஜ.கவிற்கு ஆதரவு எனும் விஷயத்தை மட்டும் செய்யாதீர்கள் என்றும் கூறியுள்ளார் . இதனை கேட்ட சசிகலாவும் பதிலேதும் சொல்லாமல் கேட்டுள்ளார் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.