Categories
உலக செய்திகள்

அரசு பண்ணுறது புடிக்கல…! இனியும் இங்கு வாழ முடியாது…. சீனாவை விட்டு வெளியேறும் மக்கள் …!!

சீனாவில் ஹாங்காங் ஜனநாயக ஆதரவாளர்கள் சீனாவுக்கு எதிராக நாளுக்கு நாள் போராட்டத்தை அதிகரித்துக் கொண்டு வருகின்றனர்.

கடந்த 1997ஆம் ஆண்டு வரை பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங்கை தனிநாடாக செயல்பட பிரிட்டன் அரசு அனுமதி அளித்தது. அன்றுமுதல் ஹாங்காங் சீனாவின் பகுதியாக கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது தேசிய பாதுகாப்பு சட்டம் மூலமாக ஹாங்காங்கில் சீன கம்யூனிச அரசு முழுவதுமாக கையகப்படுத்த முயன்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஹாங்காங் மக்களை பிரிட்டனில் குடியேற விசா கட்டுபாடுகளை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தளர்த்தி உள்ளார். பிரிட்டனின் இந்த செயல் சீனாவை கடும் கோபத்தில் ஆழ்த்தியது.

அதனால் போராட்டங்களில் ஒன்று கூடி போராடிவரும் ஜனநாயக ஆதரவாளர்களை பயங்கரவாதி என்று குற்றம்சாட்டி சீன போலீசார் அவர்களை கைது செய்து வருகின்றனர். சீனாவின் இந்த செயலுக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றது. கடந்த ஜூன் 2019 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 1400 வன்முறை சம்பவங்கள் பொது இடங்களில் நடந்ததாக சீன போக்குவரத்து காவலர் கூறியுள்ளார். சீன கம்யூனிச அரசை ஹாங்காங்கிலிருந்து வெளியேற்ற  இந்த போராட்டங்களில் சிலர் வன்முறையும் சிலர் அமைதியாகவும் ஈடுபட்டு வருகின்றனர்.

சீனாவின் இந்த வன்முறையான செயல்களில் வாழ்வதைவிட பிரிட்டனில் குடியேறலாம் என்று ஹாங்காங் மக்கள் பலரும் விசாவுக்காக விண்ணப்பங்கள் செய்து வருகின்றனர். பிரிட்டனில் , ஹாங்காங் மக்கள் வாழ்வதற்கு அவர்கள் பொருளாதார மற்றும் கல்வி ஆகியவற்றில் முன்னேறி இருந்தால் தான் அங்கு வாழ முடியும் என்று அறிவித்துள்ளது. இதனால் ஹாங்காங்கில் இருக்கும் ஏழை மக்களுக்கு பிரிட்டனில் குடியேறுவது இயலாத காரியமாக உள்ளது .இதனை போரிஸ் ஜான்சன் அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

Categories

Tech |