மின்சாரம் தாக்கியதில் 44 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆடு வளர்ப்பு தொழில் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இவர் 200 க்கும் மேற்பட்ட ஆடுகளை அதே பகுதியில் உள்ள வயல்வெளியில் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு ஜெயராமன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அந்த சமயம் இரவு நேரத்தில் திடீரென அங்கிருந்த மின்கம்பி அறிந்து பட்டியல் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளின் மீது விழுந்து விட்டது. இதனால் மின்சாரம் தாக்கியதில் 44 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டன. இதனை தொடர்ந்து காலை ஆடுகள் இறந்து கிடப்பதை பார்த்த ஜெயராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சாயல்குடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.