ஆண்மை குறைபாட்டை சரிசெய்ய இந்த முத்திரையை நீங்கள் பயன்படுத்தினால் போதும். நல்ல பலன் கிடைக்கும்.
செய்முறை:
விரிப்பில் கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி அமரவும். பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.
உங்களது முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும்.
கண்களை மூடி இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள் இழுத்து, மிக மெதுவாக வெளி விடவும். ஒரு நிமிடம் இவ்வாறு செய்யவும். இப்போது நமது கட்டை விரலை உள்ளங்கை நோக்கி மடித்து, மற்ற நான்கு விரல்களையும் கட்டை விரலுக்கு மேல் மூடி வைத்து ஒரு அழுத்தம் கொடுக்கவும். இந்நிலையில் இருகைகளிலும் செய்யவும். பத்து நிமிடங்கள் செய்யவும்.
ஆதி முத்திரையின் பலன்கள்:
உடலில் உயிரோட்டம் சீராக நடைபெறும்.
உயிர் சக்தி பாதுகாக்கப் படுகின்றது.
உடல் புத்துணர்ச்சியுடன் இயங்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
மன ஒருமைப்பாடு கிடைக்கும்.
சுறுசுறுப்பாக உற்சாகமாக திகழலாம்.
நல்ல எண்ணங்கள் உதயமாகும்.
தீய எண்ணங்கள் விலகும்.
எப்போது உடல் சோர்வடைகின்றதோ அப்போது இந்த முத்திரையை செயதால், உடன் ரத்த ஓட்டம் நன்கு இயங்கி சுறுசுறுப்பு உண்டாகும்.
படிக்கின்ற மாணவர்கள் படிக்கும் பொழுது உடல் சோர்வு ஏற்பட்டால் ஐந்து நிமிடம் இந்த முத்திரையை செய்தால் மீண்டும் சோர்வு நீங்கும். உற்சாகமாக படிக்கலாம்.
உடலில் விந்து சக்தியை தவறாக அதிகம் விரயம் செய்தவர்கள், அதனால் ஆண்மை குறைவு, வீர்ய தன்மை இழந்தவர்கள் மேற்குறிப்பிட்ட ஆதி முத்திரை செய்து வந்தால் நிச்சயம் பலன் உண்டு.