Categories
உலக செய்திகள்

“பெண்கள் தான் அதிகம்” தனிமையால் அதிகரிக்கும் தற்கொலை… அரசின் புதிய முயற்சி…!!

தனிமையால் அதிகரித்துவரும் தற்கொலைகளை தடுப்பதற்காக ஜப்பானில் தனிமை அமைச்சகம் அமைக்கப்பட்டு, தற்கொலைகளை தடுப்பதற்கு மந்திரி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

ஜப்பானில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய பிறகு கடந்த ஆண்டு மட்டும் 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்திருக்கிறது. இதில் 2153 பேர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மட்டும் தற்கொலை செய்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது அந்த மாதத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தனிமையில் இருப்பவர்கள் தான் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்வதாகவும், குறிப்பாக பெண்களே இந்த தனிமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் பிரதமர் யோசி ஹைட்சுகா என்பவர் மக்களின் தனிமையை போக்குவதற்காக தனிமை என்னும் அமைச்சகத்தை அமைத்து அதன் அமைச்சராக சுசிடெட் சகாமோட்டோ என்பவரை மந்திரியாக நியமித்துள்ளார். இவர் மக்களின் தனிமையையும், சமூகத்தில் தனித்து இருக்கும் நிலைமையை குறைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, ஜப்பானில் குறைந்து வரும் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, தனிமைப்படுத்தப்படுவதை தடுப்பதற்கும், மக்களிடையேயான உறவுகளை பாதுகாப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார். இதேபோல் தனிமை மந்திரியை இங்கிலாந்து அரசு முதன் முறையாக கடந்த 2018 ஆம் ஆண்டு நியமித்தது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Categories

Tech |