நாடு முழுவதும் வினியோக சேவைக்காக 25,000 மின் வாகனங்கள் வாங்குவதற்கு பிளிப்கார்ட் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
வால்மார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான இணையவழி வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட், தனது வினியோக சேவைகளுக்காக 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் வாகனங்களை வாங்குவதற்கு முடிவு செய்துள்ளது. இதுபற்றிய நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2030ஆம் ஆண்டுக்குள் எங்களது விநியோக கட்டமைப்பில் மின்சாரத்தில் இயங்கக் கூடிய 25,000 வாகனங்களை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்காக ஹீரோ எலக்ட்ரிக், மஹிந்திரா எலக்ட்ரிக் மற்றும் பியாஜியோ உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய மின் வாகன தயாரிப்பாளர்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். அதன்படி நாடு முழுவதிலும் உள்ள அனைத்து நகரங்களிலும் விநியோகத்திற்கான வாகனங்களை மின் வாகனங்களாக மாற்றும் திட்டத்தின் முதல் கட்டமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது.