நாம் காலையில் எழுந்தவுடன் சில பானங்களை குடிக்கக்கூடாது. அவை என்னென்ன பானங்கள் என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம்.
பலரும் நிற்க நேரமின்றி ஓடிக் கொண்டே இருக்கின்றன. அதில் சிலர் காலையில் உணவு என்பதை எடுத்துக் கொள்வதே கிடையாது. நமக்கு தெரியாமலேயே நாம் எடுத்துக் கொள்ளும் சில உணவுகள் நமக்கு உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது. ஒரு நபரின் ஆரோக்கியமான வாழ்வுக்கு மிகவும் முக்கியமானது காலையில் எடுத்துக் கொள்ளும் உணவு தான். இரவு உண்ட பிறகு நீண்ட நேரத்துக்குப் பின் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை இந்த காலை உணவு நமக்கு அளிக்கின்றது.
எனவே நாம் காலையில் சில பானங்களை அருந்தக் கூடாது. சிலர் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக பழக்கவழக்கங்களை மாற்றுகின்றனர். காலை உணவில் பழச்சாறு மற்றும் காபியை கட்டாயமாக்கி கொள்கிறோம். இது போன்ற பானங்கள் உடல் எடையை குறைக்கிறது என்று நம்புகிறீர்களா? இல்லை. நாம் காலையில் அருந்த கூடிய பானங்கள் நமது உடல் எடையை அதிகரிக்க செய்யும்.
உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் ஐந்து பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
லஸ்ஸி :
இந்த உணவு பெரும்பாலும் வட இந்தியா மற்றும் மேற்கிந்திய மக்களிடையே அதிகம் உண்ணப்படும் பானம். இந்த பானத்தில் தயிர் மற்றும் சர்க்கரை கலந்து கொடுக்கின்றனர். ஒரு டம்ளரில் லஸ்சியில் 160 கலோரி உள்ளது. இதில் அதிக அளவு கொழுப்பு மற்றும் சர்க்கரை நிறைந்துள்ளது. இது உங்கள் உடல் எடையை அதிகரிக்க செய்யும்.
சுவைமிகுந்த பால்:
மிகவும் சத்தான பாலை காலையில் எடுத்துக் கொள்ளக் கூடாது. சாதாரண பால் என்று எண்ணாதீர்கள். இது ஒரு சத்தான பானம். பாலுடன் சர்க்கரை, சாக்லேட் கொண்டு சேர்ப்பதால் இதில் அதிக அளவு கலோரி உருவாகிறது. இதனால் நம் உடல் எடை அதிகரிக்கின்றது.
ஆரஞ்சு ஜூஸ்:
அனைவரும் பெரும்பாலும் விரும்பி அருந்தும் பானங்களில் ஒன்று ஆரஞ்சு ஜூஸ். கோடை காலம் வந்து விட்டால் நாம் இதைத்தான் கட்டாயம் எடுத்துக் கொள்வோம். ஆனால் இதை ஜூஸாக எடுத்துக்கொள்ளும்போது அதிலுள்ள ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்து இழக்கின்றோம். இது உங்கள் எடையை குறைக்கும் என்று நினைத்து ஆரஞ்சு ஜூஸ் தினசரி நீங்கள் எடுத்துக் கொண்டால் அது நிச்சயம் உங்கள் எடையை அதிகரிக்கச் செய்யும்.
வாழைப்பழம்:
பெரும்பாலும் நாம் தென்னிந்திய உணவுகளில் வாழைப்பழம் மிக முக்கிய இடத்தை பிடிக்கும். வாழைப் பழத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம், கார்போஹைட்ரேட், விட்டமின்கள், தாதுக்கள் உள்ளது. ஆனால் உடல் எடையை குறைக்க விரும்புவோர் காலை இந்த பழத்தை எடுத்துக் கொள்ளும்போது உடல் எடை விரைவாக அதிகரிக்கும்.
ஸ்மூத்தீஸ்
உடல் எடையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள விரும்பினால் காலையில் ஸ்மூத்தீஸ் சாப்பிடக்கூடாது. இது போன்ற பானங்களில் 145 முதல் 160 வரை கலோரிகள் உள்ளது. எனவே எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த உணவை காலையில் தவிர்க்க வேண்டியது அவசியம்.
நீங்கள் காலையில் இந்த ஐந்து பானங்களை தவிர்த்து வேறு சில உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைக்க முடியும். எனவே இதுபோன்ற உணவுகளை தவிர்த்து கொள்ளுங்கள்.