சிலரின் மிரட்டல் காரணமாக மும்பை சென்றதாக 10 MLA_க்கள் என்னிடம் கூறினார்கள் என்று கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்த சட்டமன்ற உறுப்பினர்கள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவையடுத்து கர்நாடகா சபாநாயகர் ரமேஷ் குமார் முன்பு அங்குள்ள 10 சட்டமன்ற உறுப்பினர் ஆஜராகி அதில் 8 சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். இதை தொடர்ந்து அதிருப்தி MLA_க்கள் சந்திப்புக்கு பின்பு கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் , சபாநாயகராக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு எனக்குள்ளது. யாரையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் எனக்குகிடையாது. சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா, அரசியல் சூழ்ச்சியா? அல்லது தானாக எடுத்த முடிவா? என்று ஆய்வு செய்யாமல் ஜனநாயக முறைப்படி செயல்படுவேன். அவசரப்பட்டு முடிவெடுக்கமாட்டேன். சிலரின் மிரட்டல் காரணமாக மும்பை சென்றதாக 10 MLA_க்கள் கூறினர். எம்.எல்.ஏக்களின் ராஜினாமா குறித்து மேலும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறினார்.