இளைஞர் ஒருவர் வேலூரிலிருந்து தனது நண்பருடன் சேர்ந்து வந்து 40க்கும் மேற்பட்ட பைக்குகளை திருடி அதை வைத்து வீடு ஒன்றை கட்டி வருகிறார்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் தீலிப். தற்போது சென்னையில் கோயம்பேட்டில் டைல்ஸ் கடையில் வேலை பார்த்து வருகிறார். புதிய பைக் ஒன்றை கடந்த 2020 டிசம்பரில் வாங்கியுள்ளார். அந்த பைக்கை தனது வீட்டின் முன் நிறுத்தி பூஜை செய்துவிட்டு வீட்டின் அருகிலேயே நிறுத்தி விட்டு தூங்கச் சென்றுள்ளார். காலையில் எழுந்து பார்க்கும்போது அவரது புது பைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த திலீப் இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை செய்தனர். விசாரணையில் கோயம்பேடு, நெற்குன்றம், மதுரவாயல், பூந்தமல்லி போன்ற சென்னையின் பல பகுதிகளில் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த பைக் திருடு போனது தெரியவந்தது. அதிலும் ஒரே மாதிரியான மாடல்களை கொண்ட பைக் திருடு போனது தெரியவந்தது. இதையடுத்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து பார்த்தபோது இந்த பைக்குகளை இரண்டு பேர் சேர்ந்து தேடியுள்ளனர்.
இரண்டு பேரில் ஒருவர் பழைய குற்றவாளி யுவராஜ். இவர் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சின்னபள்ளிகுப்பம் பகுதியை சேர்ந்தவர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடமிருந்து 25 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவருடன் சேர்ந்து திருடிய கூட்டாளி சரத்பாபு. இவர் வேலூரில் வசித்து வருகிறார். சென்னை கோயம்பேடுக்கு பேருந்து மூலம் வேலூரில் இருந்து வந்து குடியிருப்பு பகுதியில் சாலையோரம் நிறுத்தப்படும் குறிப்பிட்ட மாடல் பைக்குகள் மற்றும் திருடி சென்றுள்ளனர்.
அந்த பைக்கை எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை விற்றது விசாரணையில் தெரியவந்தது. மேலும் யுவராஜ் பைக்குகளை விற்று குடியாத்தம் பகுதியில் இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி அதில் புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். இவரிடமிருந்து திருடப்பட்ட வாகனங்கள் மட்டும் 40-க்கு மேல் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.