தனியுரிமை கொள்கையை பயனர்கள் ஏற்பதற்கான கெடுவை மே 15 ஆக வாட்ஸ்அப் நிறுவனம் நிர்ணயித்துள்ளது.
பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப் நிறுவனம் புதிய தனியுரிமை கொள்கைகளையும் பயன்பாட்டு விதிகளையும் மாற்றி அமைப்பதாக அறிவித்தது. அதன்படி குறித்த தகவல்களை சேகரித்து, பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப் போவதாக தெரிவித்தது. இதனை பிப்ரவரி 8-ஆம் தேதிக்குள் பயனாளர்கள் ஏற்க வேண்டும் என்றும், இல்லையென்றால் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது எனவும் அந்நிறுவனம் தெரிவித்தது.
இது குறித்து பயனாளர்கள் குழப்பம் அடைந்ததை அடுத்து புதிய தனியுரிமைக் கொள்கையை அமல்படுத்துவது தள்ளி வைப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில் மே 15ஆம் தேதிக்குள் தனியுரிமைக் கொள்கையை ஏற்க பயனர்களுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. தவறினால் மே 16 முதல் நோட்டிபிகேஷன் மற்றும் அழைப்புகளை பெறலாம். ஆனால் மெசேஜ்களை அனுப்பவோ…. வரும் மெசேஜ்களை படிக்கவோ இயலாது. அது அடுத்த 120 நாள்களுக்கு பிறகு பயனரின் கணக்கு அழிக்கப்படும் என்றும் வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.