ஃபேஸ்புக் மற்றும் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலிய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் சமூக ஊடகங்களை அதிக அளவு பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற ஊடகங்கள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில் பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலியா ஒரு கட்டுப்பாடு விதித்துள்ளது. அதாவது ஆஸ்திரேலிய செய்தி ஊடகங்களில் இது பேஸ்புக் மற்றும் கூகுளில் பகிரப்படும் கன்டன்ட்களில் கிடைக்கும் லாபத்தை ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்கள் முழுமையாக எடுத்துக் கொள்ளாமல், அவற்றில் ஒரு பங்கை குறிப்பிட்ட செய்தி நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என ஆஸ்திரேலிய அரசு திட்டமிட்டுள்ளது