Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“கும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட அனுமதி இல்லை”… திடீர் உத்தரவு..!!!

கும்பகோணத்தில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குளக்கரையில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாசிமகத் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மகாமக குளம் அருகே வாகனங்கள் செல்ல முடியாத வகையில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு ஆறு இடங்களில் வாகனங்கள் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குளக்கரையில் நவீன கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு ஒலிபெருக்கி மூலம் தகவல்களை தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக குளத்தில் பக்தர்கள் புனித நீராட அனுமதியில்லை என தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் செயலர் சஞ்சய் தெரிவித்துள்ளார். ஆனால் குளத்துக்கு பக்தர்கள் சமூக இடைவெளியோடு வரலாம் என்றார்.

Categories

Tech |