தசை பிடிப்பு காரணமாக அவுதிபடுகிறீர்களா? இந்த உணவுகளை சரியான அளவில் எடுத்துக் கொண்டால் தசை பிடிப்பு சரியாகும்.
நமது உடலில் இருக்கும் தசைகள் சோர்வாக இருக்கும்போது தசைப்பிடிப்பு ஏற்படும். தசைப்பிடிப்பு உங்களுக்கு ஏற்படுகிறது என்றால் உங்களின் உடலில் தாதுக்களின் குறைபாடு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். உடற்பயிற்சி செய்யும் போது நடக்கும் போது தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நமது உடலில் கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் இல்லாத காரணத்தினாலும் தசைப்பிடிப்பு ஏற்படும்.
ஊட்டச்சத்து நிபுணர்கள் இது குறித்து கூறும்போது தசைபிடிப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளது. இதனை சரிசெய்ய நீர் மிக முக்கியம். வைட்டமின், பொட்டாசியம், கால்சியம் போன்ற தாதுக்கள் நிறைந்த பொருட்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.
தசைப்பிடிப்பு சமாளிக்க எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும் ?
வாழைப்பழம் இது எல்லா சீசனிலும் கிடைக்கும் ஒரு பழம். இதில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை உள்ளது. அதனால் தசை பிடிப்பு மிக அவசியமான பல சத்துக்களை இது தருகிறது .
சக்கரவள்ளி கிழங்கு அல்லது உருளைக்கிழங்கு. இதில் உள்ள வைட்டமின் சத்துகள் தசைப்பிடிப்புகளை தடுக்க உதவுகிறது.
தர்பூசணி பழத்தை நீங்கள் சாப்பிட்டு வந்தால் நீர் பற்றாக்குறை காரணமாக ஏற்படும் தசைப்பிடிப்புகள் சரியாக உதவும்.
பால் இதில் அதிக அளவு கால்சியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் நிறைந்துள்ளதால் இதில் உள்ள புரதம் தசைப்பிடிப்புகளை சரிசெய்யும்.