Categories
தேசிய செய்திகள்

நீரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்க உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி…!!!

வங்கி மோசடியில் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய நீரவ் மோடி இந்திய அரசிடம் ஒப்படைக்க லண்டன் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து நிரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். அதன் பிறகு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவரிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை அமலாக்கத் துறையினர் மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வந்தனர். மேலும் இதுவரை 5 ஆயிரம் கோடிக்கு அதிகமான சொத்துக்களை சிபிஐ முடக்கியுள்ளது.

அவரின் வங்கி கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டு ரொக்கப் பணம், டெபாசிட்டுகள், சொகுசு கார் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட கைக்கடிகாரங்கள், வீடுகள் நீளம் என பலதரப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டன. மேலும் அவரது நிறுவனத்தின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவரை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடந்து வந்தன. இந்நிலையில் இன்று அவரது வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் நீரவ் மோடியை இந்திய அரசிடம் ஒப்படைக்க லண்டன் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |