Categories
உலக செய்திகள்

“எச்சரிக்கை!” இவர்களை கட்டிப்பிடிக்காதீர்கள்… பள்ளிகளிலும் சோதனை திட்டம்…!!

பிரிட்டனில் கொரோனா காரணமாக குழந்தைகள், தாத்தா பாட்டிககளை கட்டிபிடிக்காமல் இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

பிரிட்டனில் கொரோனா தீவிரத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் முக்கிய பங்கு வகிப்பது தடுப்பூசி செலுத்தும் திட்டம். மக்களுக்கு உடனடியாக தடுப்பூசிகளை செலுத்துவதன் மூலம் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.

இந்நிலையில் பிரதமர் அலுவலகத்தில் துணை தலைமை மருத்துவ அதிகாரி ஜென்னி ஹரீஸ் செய்தியாளர்கள் சந்திப்பில், வயது மூத்தவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் குழந்தைகள் அவர்களிடம் நெருங்கி பழகவோ கட்டிபிடிக்கவோ வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் சோதனை திட்டங்கள் பள்ளிகளிலும் செயல்படுகிறது. இதன் மூலமாக பெற்றோர்கள், தாத்தா, பாட்டிகள், ஆசிரியர்கள் மற்றும் பிற பள்ளியை சேர்ந்த குழந்தைகளும் எவ்வாறு பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தலாம். மேலும் உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் நீங்கள் அளவுடன் இருந்தால் தான் சமூகத்திலும், வீட்டிலும் பரவக்கூடிய கொரோனாவை தடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

அதற்காகத்தான் சிறு எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும். அதாவது தன் தாத்தா, பாட்டிகள் தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் அவர்கள் வீட்டில் இருந்து வெளியேறாமல் இருக்க ஊக்குவிக்கலாம். அந்த தடுப்பூசியின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை நாம் உறுதியாக நம்ப வேண்டும். அதுவரை அதிகமாக அவர்களை கட்டிப்பிடிப்பதை தவிர்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |