இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நேரு நகரில் முருகன் முரளி பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் சரவணன் என்பவரை தனது வீட்டின் அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்ததால் அவரை கண்டித்துள்ளார். இதில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது காயமடைந்த முருகன் முரளி பாபு மற்றும் அவரின் தாய் நாகவல்லி போன்ற இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
அதோடு காயமடைந்த சரவணன், லட்சுமி ஆகியோரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கேணிக்கரை போலீசார் சரவணன் தரப்பை சேர்ந்த மகாசக்தி நகர் அன்பரசன், சடையன் வலசை அஜித்குமார் போன்றோரை கைது செய்து விட்டனர். இதனை தொடர்ந்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் முருகன் முரலி பாபு தரப்பை சேர்ந்த இப்ராஹிம் நகரில் வசித்து வரும் நந்திஷ் குமார், பசும்பொன் நகரில் வசித்து வரும் செல்வகுமார் போன்றோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.