புதுச்சேரியில் பிரதமர் மோடி கலந்து கொண்ட பாஜக பிரச்சார கூட்டத்தில் பேசிய பாஜக புதுவை மாநில தலைவர் சாமிநாதன் பேசுகையில்,சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளில் மன்மோகன்சிங், ராஜிவ்காந்தி, இந்திராகாந்தி அனைத்து பிரதமர்களும் வெளிநாட்டிற்கு கடன் வாங்க சென்றார்கள்.
உலகத்திலேயே ஒரு ரூபாய் கூட கடன் வாங்காமல் ஆறு ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்ட சரித்திர நாயகன் நரேந்திர மோடி. ஊழல் இல்லாத புதுச்சேரி வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் மலரட்டும் தாமரை, ஒளிரட்டும் புதுச்சேரி என்ற கோஷத்தினை முன்வைக்க வேண்டும்.
உலக நாடுகளை எல்லை போராடி பார்த்து இருப்போம். ஆனால் இன்று பாகிஸ்தான், சைனா முதல் முறையாக 500 கிலோ மீட்டருக்கு அப்பால் அவர்களை பின்வாங்க வைத்து எதிரியை வீழ்த்திய ஒரு தலைவர் என்றால் அது பாரத பிரதமர் நரேந்திர மோடி என பிரதமருக்கு புகழாரம் சூட்டினார்.
நம்முடைய ஒட்டுமொத்த நோக்கமும் புதுச்சேரி மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி கண்டிப்பாக அமையும். முப்பது இடம் நாம் தாம் வெற்றி பெற வேண்டும். நாளை நமதே நாற்பதும் நமதே. நம்முடைய கூட்டணி கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், என்ஆர் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சியுடன் 30 சீட்டுகளையும் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.