கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி மருத்துவமனையின் ஏழாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள காளிங்கராயன் பாளையம் பகுதியில் சேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகரத்தினம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 26 வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பண்ணாரி சாலை அருகே ஏற்பட்ட விபத்தில் சேகரனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு குரும்பபாளையம் பகுதியில் உள்ள குமரன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் சேகரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து டாக்டர்கள் அவருடைய மனைவி நாகரத்தினத்திடம் கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நாகரத்தினம் திடீரென மருத்துவமனையின் ஏழாவது மாடிக்கு சென்று கீழே குதித்து தற்கொலை செய்துவிட்டார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவில்பாளையம் போலீசார் அங்கு விசாரணை நடத்தியுள்ளனர். அதன்பின் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கோவில்பாளையம் போலீசார் கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி ஏழாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.