மாடு மேய்த்த பெண் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியும் கொடூரமாக தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பகுதியில் வசிக்கும் தம்பதிகள் முருகன் – பேச்சியம்மாள். இவர் மாடுகள் வளர்த்து வந்துள்ளார். இவர் எப்போதும் அந்த பகுதியில் உள்ள தோப்புகளில் மாடுகளை மேய்ப்பது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல நேற்று மாலை பேச்சியம்மாள் மாடுகளை மேய்த்து கொண்டிருந்துள்ளார். அப்போது மைக்கேல் என்பவர் அங்கு வந்து பேச்சியம்மாளை கடுமையாக தாக்கி அவருடைய கமல் மற்றும் கழுத்தில் கிடந்த தாலி செயினையும் பறித்துள்ளார். இதையடுத்து பேச்சியம்மாள் தான் நகைகளை தந்துவிடுகிறேன் என்றும் தன்னை விட்டுவிடுமாறும் கெஞ்சி கேட்டுள்ளார்.
ஆனால் அதை கேட்காமல் அவர் வைத்து கொடூரமாகத் தாக்கி நகைகளை பறித்துள்ளார். இதன் மூலம் இரண்டு காதுகளும் கிழிந்து விட்டதால் பேச்சியம்மாள் அலறியுள்ளார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் மைக்கேலை தேடி வருகின்றனர். இதையடுத்து காவல்துறையினர் அவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழிப்பறி சம்பவத்தினால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.