பிரித்தானியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்பதற்கு உத்திரவாதம் தரமுடியாது என பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
இங்கிலாந்து மாகாணத்தின் தலைநகரான லண்டனில் அமைந்துள்ள பிரித்தானியாவில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை குறித்து அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். அங்கு தெற்கு லண்டன் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிரதமர் உரையாற்றியுள்ளார். நகரில் இயங்கும் விருந்தோம்பல் மற்றும் பொழுதுபோக்கு இடங்களை திறப்பதற்காக குழந்தை தடுப்பூசி பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தும் அரசாங்க மறு ஆய்வுத் திட்டத்தை குறிப்பிட்டார். இந்த தடுப்பூசி பாஸ்போர்ட் ஆய்வானது மைக்கல் கோ தலைமையிலான குழு செயல்படும் என்று கூறினார்.
அவர் கூறும்போது, ” சிலர் நாங்கள் வேகமாக முடிவை எடுப்பதாகவும், சிலர் மெதுவாக முடிவு இருப்பதாகவும் கூறுகின்றனர். ஆனால் நான் சமநிலை முடிவே சரியான முடிவாகும் என்று நினைக்கிறேன், இந்த கால அவகாசமானது மாற்றங்களினால் ஏற்படும் தாக்கத்தை புரிந்து கொள்ள உதவுகிறது. இதன்படி ஜூன் 21ஆம் தேதிக்குள் நாட்டிலுள்ள கட்டுப்பாடுகளை நீக்கப்பட்டு இயல்புநிலைக்கு திரும்பப்படும் என்று நம்பிக்கையோடு இருப்பதாகவும், ஆனால் இதற்கு என்னால் எந்த உத்திரவாதமும் தரமுடியாது” என்று பிரதமர் ஜான்சன் கூறினார்.