Categories
தேசிய செய்திகள்

தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக… சிறுத்தையுடன் சண்டை போட்டவர்… உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தனது குடும்பத்தினரை காப்பாற்றுவதற்காக ஒருவர் சிறுத்தையுடன் சண்டை போட்டதால் சிறுத்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் இருக்கும் பானவரா கிராமத்தில் ராஜ கோபால் நாயக்கா என்ற மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் வசித்துவருகிறார். இவருக்கு நாயகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் தங்கள் மகளுடன் மோட்டார் சைக்கிளில் பெண்டாகெரே நோக்கி சென்று கொண்டிருந்த போது, திடீரென இவர்களது மோட்டார் சைக்கிளின் குறுக்கே ஒரு சிறுத்தை ஓடி வந்துள்ளது.

இதனையடுத்து கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளானது சிறுத்தை மீது மோதி ராஜகோபால் நாயக்கா உள்ளிட்ட 3 பேரும் கீழே விழுந்து விட்டனர். இதனால் கோபமடைந்த சிறுத்தை மூன்று பேரையும் தாக்க வருவதை கண்ட ராஜகோபால், தனது குடும்பத்தினரை காப்பாற்றுவதற்காக சிறுத்தையுடன் சண்டை போட்டுள்ளார். அப்போது அவர் சிறுத்தையை பலமாக தாக்கி தூக்கி வீசியதில் சிறுத்தை பரிதாபமாக இறந்து விட்டது.

அதோடு சிறுத்தையுடன் சண்டை போட்டதால் ராஜகோபாலுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பி விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பெண்டாகெரே வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் தனது மனைவி மற்றும் மகளை காப்பாற்றுவதற்காக ராஜகோபால் சிறுத்தையுடன் சண்டை போட்டதும், அதனால் சிறுத்தை உயிரிழந்ததும் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் சிறுத்தைக்கு பிரேத பரிசோதனை செய்த பிறகு அதனை காட்டுப்பகுதியில் புதைத்து விட்டனர். இது குறித்து கிராம மக்கள் கூறும்போது, பெண்டாகெரே பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பைரகொண்டஹல்லி கிராமத்தில் வசிக்கும் தாய் மற்றும் மகனை தாக்கிய அதே சிறுத்தை தான் ராஜகோபால் குடும்பத்தினரையும் தாக்கியது என்று தெரிவித்துள்ளனர். மேலும் ராஜ கோபால் தனது குடும்பத்தினரை காப்பாற்றுவதற்காக சிறுத்தையை தாக்கியதால் தான் அது உயிரிழந்தது எனவும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |