நாளைக்கு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் போக்குவரத்து சேவை பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
உதிய உயர்வு, தற்காலிக பயணிகளுக்கு நிரந்தர பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் போக்குவரத்து துறையினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் தொழிற்சங்கத்தினர் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் .அதன்பின்பு அந்தப் பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படாத நிலையில் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதையடுத்து அண்ணா தொழிற்சங்கம், பாமக, தேமுதிக மற்றும் பாஜக உள்ளிட்ட தொழிற்சங்க ஊழியர்களை வைத்து பேருந்துகளை இயக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நாளைக்கு வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது என்று ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.