Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இத பண்ணி கொடுங்க… ரொம்ப கஷ்டமா இருக்கு… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

தரைப்பாலத்தை சீரமைக்க தர கோரி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள குண்டவெளி கிராமத்தில் இருந்து வெத்தியார்வெட்டு கிராமத்திற்கு செல்ல தார் சாலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் அனைவரும் அதிகமாக அந்த சாலையை பயன்படுத்தி வந்துள்ளனர். இதற்கிடையே ஏரியில் இருந்து தண்ணீர் செல்வதற்காக அந்த சாலையின் குறுக்கே குழாய்கள் பதிக்கப்பட்டு தரைப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. அதன்பின் வழக்கமாக சாலையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் பெய்த கனமழையால் ஏரியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியே வந்தபோது தரைப்பாலமும் உடைந்துள்ளது.

இதனால் அந்த சாலையை பயன்படுத்தி வந்த பொதுமக்கள் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதிலும் குறிப்பாக பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் உரிய நேரத்திற்கு செல்ல முடியவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வருத்தத்துடன் கூறுகின்றனர். எனவே இந்த சாலையில் உள்ள தரைப்பாலத்தை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |