Categories
உலக செய்திகள்

ஓராண்டாக முடக்கப்பட்ட சோதனை… பெண்களின் பாதுகாப்பிற்காக.. புற்றுநோய் பரிசோதனை கிட்கள் வழங்கும் NHS…!!

பிரிட்டனில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிவதற்கான  சோதனை கிட்கள் சுமார் 31000 பெண்களுக்கு அளிக்கப்படுகின்றன.

சமீபகாலமாக கொரோனா தொற்றால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் பெண்கள் பெரும்பாலானோர் மருத்துவ கிளினிக் மற்றும் பொது மருத்துவரை அணுகி ஸ்மியர் பரிசோதனை செய்வதில்லை. இதனால் NHS சோதனையின் ஒரு பகுதியாக தற்போது வீடுகளில் சுய பரிசோதனை செய்யும் விதமாக கிட்கள் அளிக்கப்படுகிறது. இது பெரும்பாலான பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.

அதாவது கடந்த ஓராண்டாக கொரோனா தீவிரத்தால் பெண்கள் உடல் நல பரிசோதனைகள் செய்யாமல் இருப்பதால் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தொண்டு நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன. அதாவது இந்த கிட்டை பயன்படுத்தும் பெண்கள் தாமாகவே சோதனைக்கான மாதிரிகளை எடுத்து இந்த சோதனைக்கான தபால் மூலம் அனுப்பலாம்.

இதனால் பல பெண்களுக்கு புற்றுநோய் வராமல் தடுக்கப்படும். மேலும் புற்றுநோய் அறிகுறிகளை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறுவது உயிர்களை காக்கும். இதனால் ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் கொரோனா காரணமாக நேரடி பரிசோதனைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அவை மீண்டும் தொடங்கப்பட்டிருக்கின்றன.

Categories

Tech |