Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சருமத்திற்கு அழகு தரக்கூடிய பீட்ரூட்டில்… அருமையான சாலட்டை செய்து கொடுத்து அசத்துங்க..!!

பீட்ரூட் சாலட் செய்ய தேவையான பொருட்கள்:

பீட்ரூட்                                 – 1
வெங்காயம்                       – 1
தேங்காய்த் துருவல்     – 1 மேசைக்கரண்டி
எண்ணெய்                         – 1 தேக்கரண்டி
வேர்க்கடலை                   – 1 மேசைக்கரண்டி
கடுகு                                     – ¼ தேக்கரண்டி
பச்சை மிளகாய்               – 1
உப்பு                                       – தேவையான அளவு

செய்முறை:

முதலில் பீட்ரூட்டை எடுத்து, தண்ணீரில் சுத்தம் செய்து, தோல் நீக்கியபின், கேரட் துருவியால் துருவியதுடன், தேங்காயையும் துருவி எடுத்து கொள்ளவும். பின்பு பச்சை மிளகாய், வெங்காயத்தை சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும்.

ஒரு பவுலில்  துருவிய  பீட்ரூட்டை போட்டு, அதில் நறுக்கிய வெங்காயம், ருசிக்கேற்ப உப்பு போட்டு நன்கு கரண்டியால் கலந்து கொள்ளவும்.

மேலும் அடுப்பில் வாணலியை வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடேறியதும், கடுகு போட்டு பொரிந்ததும், வேர்க்கடலை, நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து தாளித்தபின், நிறம் மாறியதும், கலந்து வைத்த பீட்ரூட் கலவையை போட்டு நன்கு கிளறி விடவும்.

இறுதியில் கிளறி விட்ட பீட்ரூட் கலவையில், துருவிய தேங்காயை தூவி அலங்கரித்பின்  பரிமாறினால்  அருமையான ருசியில், பீட்ரூட் சாலட் தயார்.

Categories

Tech |