Categories
கிரிக்கெட் விளையாட்டு

அம்மாடியோ!… ஒரு ஐபிஎல் வீரருக்கு இவ்வளவு சம்பளமா?… நம்பவே முடியல…!!!

உலக அளவில் புகழ்பெற்ற ஐபிஎல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட ஊதியம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் போட்டிகளில் மிக முக்கியமான போட்டியாக ஐபிஎல் போட்டி காணப்படுகிறது. ஐபிஎல் போட்டிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்களும் பங்கு பெறுவதால் இந்தப் போட்டிக்கான ரசிகர் பட்டாளம் பெருமளவில் காணப்படுகிறது. இந்த ஐபிஎல் தொடர் சென்னை, மும்பை, டெல்லி ,பஞ்சாப், ராஜஸ்தான், ஹைதராபாத், பெங்களூர்,கொல்கத்தா  உட்பட 8 அணிகள் உள்ளன.

அண்மையில் சென்னையில் நடந்த 2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் பல்வேறு வீரர்கள் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இந்த ஐபிஎல் போட்டியானது 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை நடைபெற்று வருகிறது. இதில் 14 ஐபிஎல் போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதற்காக 6 ,144 கோடி ரூபாய் ஏலத்திற்காக மட்டுமே செலவிடப்பட்டதாக  கூறப்படுகிறது. குறிப்பாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் அதிக ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

14 சீசன்களில் நடந்த ஐபிஎல் தொடரின் வீரர்களின் நாடுகளும் அவர்களின் தொகையும்:

இந்தியா ரூபாய் 3,443 கோடிக்கும். ஆஸ்திரேலியா ரூபாய் 905.9 கோடிக்கு 94 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தென்னாபிரிக்கா ரூபாய் 539 கோடிக்கு 56 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டன.

வெஸ்ட் இண்டீஸ்  ரூபாய் 458 கோடிக்கு 33 வீரர்கள தேர்வு செய்யப்பட்டது.

இங்கிலாந்து ரூபாய் 285 . 96 கோடிக்கு 33 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டது.

நியூசிலாந்து ரூபாய் 211.6கோடிக்கு 31 வீரர்களை தேர்வு செய்யப்பட்டது.

இலங்கை ரூபாய் 195 . 93 கோடிக்கு 27 வீரர்களை தேர்வு செய்யப்பட்டது.

ஆப்கானிஸ்தானின் ரூபாய் 58.4 கோடிக்கு 4 வீரர்கள் தேர்வுசெய்யப்பட்டது.

வங்கதேசம் ரூபாய் 34 . 28 கோடிக்கு 6 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டது.

பாகிஸ்தான் ரூபாய்12.84 கோடிக்கு 11 வீரர்களை தேர்வு செய்யப்பட்டது.

நெதர்லாந்தில் ரூபாய் 5.27 கோடிக்கு இரண்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டது.

ஜிம்பாபே ரூபாய் ஒரு கோடிக்கு 3 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டது.

இவ்வாறு கடந்த 14 ஐபிஎல் தொடரில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

Categories

Tech |