Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிஎஸ்கே அணியில் இவர் இருக்காரா?… அப்போ இந்த ஆண்டு சிஎஸ்கே-க்கு தான் கோப்பை…!!!

இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள ராபின் உத்தப்பா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்.

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் சிஎஸ்கே அணிக்காக ராபின் உத்தப்பா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராபின் உத்தப்பா கடந்த சீசன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். தற்போது இவர் சிஎஸ்கே அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 35 வயதுடைய ராபின் உத்தப்பா போன சீசன்களில் ராஜஸ்தான் ராயல் அணிக்காக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

சிஎஸ்கே அணியானது அவரின் ஐபிஎல் போட்டியில் 6 வது அணி ஆகும். இவர் கடந்த 2006ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இதுவரை இவர் 46 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 934 ரன்களும், 6 அரை சதங்களும் அடித்து  சாதனை புரிந்துள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டு தோனி தலைமையிலான உலகக் கோப்பை டி20 போட்டியில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

தற்போது நடந்த சையத் முஷ்டாக் அலி கோப்பை போட்டிக்காக கேரளா அணியில் 5 இன்னிங்சில் 469 ரன்கள் குவித்தார் உத்தப்பா. அதேபோல் மும்பை அணிக்கு எதிராக 54 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து 213 ரன்கள் இலக்கை கொண்டு கேரளா அணிக்காக விளையாடினார். தற்போது விஜய் ஹசாரே ஒரு நாள் போட்டியிலும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.

கேரளா- ஒரிசா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் 85 பந்துகளில் 107 ரன்களும் மற்றும் உத்திரபிரதேச  அணிக்கு எதிராக 55 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து சிறப்பாக ஆடினார். முத்தப்பா வின் வருகையினால் சிஎஸ்கே ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் உள்ளனர். நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு துணையாக ராபின் உத்தப்பா செயல்படுவார் என்று கருதப்படுகிறது

Categories

Tech |