Categories
அரசியல் தேசிய செய்திகள்

BREAKING: அரசியலில் குதித்தார் முக்கிய கிரிக்கெட் வீரர்…!!!

இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இந்தியாவில் சில மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் முக்கிய காட்சிகளில் இருக்கும் சில முக்கிய பிரபலங்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் கடந்த சில மாதங்களாக பாஜகவில் இணைந்து கொண்டிருக்கிறார்கள்.

அது மட்டுமன்றி முக்கிய கட்சிகளில் இருக்கும் அமைச்சர்களும், சில பிரபலங்களும் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவர் சமீப நாட்களாக மத்திய அரசுக்கு எதிரான பல கருத்துக்களை ட்விட்டர் மூலம் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |