Categories
தேசிய செய்திகள்

உலகில் மிகப்பெரிய ஸ்டேடியம்… மோட்டேரா ஸ்டேடியத்துக்கு பிரதமர் மோடி பெயர்…!!!

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஸ்டேடியம் என பெயரிடப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோட்டேரா ஸ்டேடியத்தின் பெயர் நரேந்திர மோடி ஸ்டேடியம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்டேடியத்தை புதுப்பிக்கும் முன்பு சர்தார் வல்லபாய் படேல் ஸ்டேடியம் என பெயரிடப்பட்டிருந்த நிலையில், தற்போது புதுப்பிக்கப்பட்ட பிறகு மோடி பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மைதான திறப்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, கிரண் ரிஜிஜு, குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ்தத் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் 63 ஏக்கர் அளவிலான நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த மைதானத்திற்கு நான்கு நுழைவாயில்கள் உள்ளன. பிரம்மாண்டமான விளக்கு கம்பங்களுக்கு பதிலாக மைதானம் மேற்கூரை விளிம்புகளில் வட்ட வடிவில் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பிரம்மாண்ட உணவகம், மினி 3d திரையரங்கம், மிகப் பெரிய நீச்சல் குளம் மற்றும் விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட இதர வசதிகளும் உள்ளன.

Categories

Tech |